தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/இறைவனிடம் சரணடைந்து விடு

இறைவனிடம் சரணடைந்து விடு

இறைவனிடம் சரணடைந்து விடு


ADDED : ஆக 24, 2011 09:08 AM

Google News

ADDED : ஆக 24, 2011 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* 'ராமா' என்ற சொல்லில் 'ரா' என்ற எழுத்து ஆன்ம சொரூபத்தை குறிப்பதாகும். 'மா'என்ற எழுத்து 'நான்' என்ற ஆணவத்தை குறிக்கிறது. ஒருவர் 'ராமா' என்று இடையறாமல் ஜெபித்துக் கொண்டே இருந்தால், 'மா' என்ற எழுத்து 'ரா' என்ற எழுத்தில் ஐக்கியமாகி மறைந்துவிடுகிறது.

* 'சரணாகதி' என்பது வலிமை மிக்க பிரார்த்தனை. கடவுள் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்வார் என்ற நம்பிக்கை இருந்தால் அவரிடம் முழுமையாக சரணடைந்துவிடு.

* இன்பம், துன்பம் இரண்டையும் கடக்கும் வரை சாதனைகளை தொடருங்கள். இறுதியில் உண்மை மட்டுமே எஞ்சி நின்று அதன் முழு பலனை தந்து விடும்.

* நான் பலவீனமானவன், தீயவன் என்று நினைப்பதுகூட மனிதன் செய்யும் பெருந்தவறாகும். உண்மையில் அவன் பலவீனனும் அல்லன்; தீயவனும் அல்லன், ஒவ்வொரு மனிதனும் தெய்வீகத்தன்மையும், வலிமையும் படைத்தவனே ஆவான். அவனது உலகியல் பழக்க வழக்கங்களும், எண்ணங்களுமே அவனை பலவீனமாக்குகின்றன.

- ரமணர்



Trending





      Dinamalar
      Follow us